×

மின்சார ரயில்களில் கடும் சோதனை 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு அனுமதி: ரயில்வே அதிகாரிகள் அதிரடி

சென்னை: சென்னையில் இயக்கப்படும் மின்சார ரயில் பயணிகள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனரா என்று ரயில்வே அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர். அப்படி போட்டவர்களை மட்டுமே ரயில்வே அதிகாரிகள் பயணம் செய்ய அனுமதித்தனர். சான்று இல்லாதவர்களை திருப்பி அனுப்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய பொது போக்குவரத்தான மின்சார ரயில் பயணிகளுக்கும் தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன்படி 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே நேற்று முதல் மின்சார ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது.இதையடுத்து மின்சார ரயில் பயணிகள் அனைவரும் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனரா என சோதனை மேற்கொள்ள தெற்கு ரயில்வே சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் ரயில் நிலைய முகப்பு, நடைமேடையில் பயணிகளை சோதனை செய்வதற்காக தயார் நிலையில் இருந்தனர். அப்போது மின்சார ரயிலில் பயணம் மேற்கொள்ள வந்தவர்களிடம் 2 தவணை தடுப்பூசி போட்ட சான்றிதழ் உள்ளதா என சோதனை மேற்கொண்டனர். இதில் 2 தவணை தடுப்பூசி போட்ட சான்றிதழ் வைத்திருப்பவர்களை மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதித்தனர். மேலும் டிக்கெட் பரிசோதகர்கள் மின்சார ரயிலிலும் பயணிகளிடம் 2 தவணை தடுப்பூசி போட்டுள்ளனரா என சோதனை செய்தனர். அதே சமயம், 2 டோஸ் தடுப்பூசி போடாதவர்களை அதிகாரிகள் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை. மின்சார ரயிலில் பயணம் மேற்கொள்ள வழங்கப்படும் சீசன் டிக்கெட்களில் தடுப்பூசி போட்ட சான்றிதழில் உள்ள அடையாள எண்ணும் நேற்று முதல் அச்சடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது….

The post மின்சார ரயில்களில் கடும் சோதனை 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு அனுமதி: ரயில்வே அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...